திடீர் பயணமாக டெல்லி விரைந்த ஆளுநர்!

அரசியல்

ஆளுநரை திரும்பப் பெற திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ள நிலையில் திடீர் பயணமாக டெல்லி விரைந்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக ஆளுநர் பேசி வரும் கருத்துகள் பலவும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், அவரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டன.

திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு ஆளுநரைத் திரும்பப் பெறுவதற்காகக் கையெழுத்து திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட வேண்டும் என்று நேற்று கடிதம் வெளியிட்டார்.

இன்றுக்குள் கையெழுத்திட வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற 57 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க இருக்க இருக்கிறோம்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

இவர் மசோதாக்களை மூலையில் போட்டு வைத்துள்ளார். பாஜகவின் ஊதுகுழல் போல் செயல்படுகிறார். இவர் தமிழக ஆளுநராக இருக்க தார்மீக உரிமையற்றவர் ஆகிவிடுகிறார்.

எனவே இவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி 57 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை மனுக்கள் அனுப்புகிறோம்” என்று கூறினார்.

இந்தசூழலில் இன்று (நவம்பர் 3) காலை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி விரைந்துள்ளார். அங்கு குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரியா

எலான் மஸ்க்குக்கு வழிகாட்டும் தமிழன்… யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தலைவர்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *