வெற்றியின் உடலுக்கு ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி!

Published On:

| By Kavi

மறைந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4ஆம் தேதி இமாச்சல பிரதேசத்துக்குச் சென்றிருந்தார்.

அங்கு காரில் சென்றுகொண்டிருந்த போது சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டது. அங்கிருந்து தனி விமானம் மூலம் வெற்றியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.

Image

சென்னை விமான நிலையத்திலிருந்து வெற்றியின் உடல் ராஜகீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Image

பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு,
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி சைதை துரைசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கூட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பி சென்றுவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆளுநர் உரையில ஆளுநர் தேவையா? அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி ராஜினாமா செய்தது ஏன்? புழல் சிறைக்குள் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share