தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று (ஜூலை 13) நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்,ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி உள்ளிட்டோரைச் சந்தித்தார். 6 நாள் டெல்லியிலிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனினும் ஆளுநர் டெல்லி சென்று உள் துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரைச் சந்தித்து வந்த பின் நடைபெற்றிருக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
ஊரெங்கும் வெள்ளம்… குடிக்க தண்ணியில்ல! விநோத வேதனையில் டெல்லி
மகளிருக்கு மாதம் ஆயிரம்- முழு பொறுப்பும் கலெக்டர்களிடம்! -ஸ்டாலின் அறிவிப்பு!