தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி இன்று (ஜூலை 18) ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு சட்டத் திருத்தம் மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
அதனையடுத்து கடந்த 12ஆம் தேதி மதுவிலக்கு சட்டத் திருத்தம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் சென்னையில் கழிவு நீர் இணைப்பை கட்டாயமாக்கும் சட்டத்திருத்தம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தல். புதிய மாநகராட்சி உருவாக்க வருவாய், மக்கள் தொகை வரம்புகள் குறைத்தல், சென்னை காவல் சட்டத்தை பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் ஆகிய 4 சட்டதிருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பீனிக்ஸ் பறவையாக 3வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதிப்பாரா பி.வி.சிந்து?