அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றியதை நீக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரான இன்று(ஜனவரி 9) ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்தார்.
ஆனால் அதில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல் ஆட்சி, பெரியார், அண்ணா என்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உரை தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டும் ஆளுநர் ரவி அரசின் உரையை முறையாக படிக்கவில்லை என்று முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
எனவே சட்டப்பேரவை விதியின்படி அரசு தயாரித்து கொடுத்த ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
அதேபோல அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் தவிர்த்து, விடுத்த பகுதிகள் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் ஒருமனதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதாக அவர் கூறினார்.
கலை.ரா
திராவிட மாடல் வார்த்தையை தவிர்த்த ஆளுநர்: அண்ணா, பெரியார் பெயர்களையும் சொல்லாமல் புறக்கணிப்பு !