“திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம்”: ஆளுநர் ரவி

அரசியல்

திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மே 24) தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியபோது, “இன்று நான் உங்கள் முன்பாக ஆளுநராக பேச வரவில்லை, திருவள்ளுவரின் சிஷ்யனாக பேச வந்துள்ளேன்.

1964-ஆம் ஆண்டு நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, சரஸ்வதி பூஜை  நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மதியவேளையில் நான் நூலகத்திற்கு சென்றேன். அங்கு தான் முதன் முதலாக ‘எண்ணிய எண்ணியாங்கு’ திருக்குறளை படித்தேன்.

முன்னதாக நான் பகவத் கீதை நூலை படித்திருக்கிறேன். திருக்குறளை நான் படித்தபோது, எனக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. என்னுடைய கனவுகளை துரத்த உந்துவிசையாக அமைந்தது.

தமிழகத்திற்கு நான் வந்தபோது, எனக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து நான் திருக்குறளை வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் தனி மனிதர், குடும்பம், வாழ்க்கை என அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடியதாக திருக்குறள் இருப்பதை நான் உணர்ந்தேன்.

திருக்குறள் என்பது ஒரு புத்தகம் மட்டுமல்ல, அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் விரிவான வாழ்க்கையை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம். தமிழ் நாட்காட்டியில் இந்த நாள் தான் திருவள்ளுவர் தினம். ஆனால், திருவள்ளுவர் நாளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. என்னுடைய குருவிற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைத்திருக்கிறேன்.

திருக்குறன் மனித சமுதாயத்திற்கு கிடைத்த புனிதமான பரிசாகும். திருவள்ளுவர் தமிழகத்தின் புண்ணிய பூமியில் பிறந்ததற்காக நாம் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும்.

பிரதமர் மோடி திருக்குறளை மிகவும் நேசிக்கக்கூடியவர். அவர் அடிக்கடி திருக்குறள் படிக்கக்கூடியவர். அவர் தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து Vs போலீஸ்: முதல்வருக்கு TNSTC தொழிலாளர்கள் கோரிக்கை!

கார்த்தி 27 ஃபர்ஸ்ட் லுக் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on ““திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம்”: ஆளுநர் ரவி

  1. அய்யா, அந்த தர்மசாஸ்திரத்துல “காம சாஸ்திரமும்” இருக்குங்களா அய்யா? அதாவது காமத்துபால் தர்மசாஸ்திர கணக்குல வருதுங்களா அய்யா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *