தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. governor ravi return bills
இந்த வழக்கின் விசாரணையின் போது “தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன்?” என்று மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரம்:
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள்
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாக்கள்
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா
தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதா
தமிழ்நாடு மீன்வள மற்றும் கால்நடை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புதல் கோரிய மசோதா
தமிழ் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதா
10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. governor ravi return bills
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பன்னீர் மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது!
ஷமி 7 விக்கெட் எடுக்குற மாதிரி கனவு கண்டேன்… வைரலாகும் ரசிகரின் பதிவு!
WorldCup 2023: 48 வருஷத்துல இதான் பர்ஸ்ட்… கோலி, ரோஹித், ஷமி உடைச்ச ரெக்கார்டுகளை பாருங்க!