ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி 50 லட்சம் கையெழுத்துகளுடன் வைகோ அனுப்பிய கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடு அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று 57 எம்.பி.க்களின் கையெழுத்துகளுடன் மொத்தம் 50 லட்சம் கையெழுத்துகள் கொண்ட கடிதங்களைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார் வைகோ.
இந்த கடிதங்கள் பெட்டி பெட்டியாக ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டுக் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த கடிதங்களை உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்காகக் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பபப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வைகோவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார்.
பிரியா
ஆஸ்கருக்கு தேர்வான மலையாள திரைப்படம்!
ஈராக் திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து: 100 பேர் பலியான சோகம்!