குடியரசு தினம்: மெரினாவில் தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் ரவி

Published On:

| By Selvam

நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. governor ravi hoist national flag in Chennai marina

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

அப்போது ஹெலிகாப்டர் மூலமாக தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது. பின்னர் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு, தேசிய மாணவர், மாணவிகள் படைப்பிரிவினர் மரியாதையை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தின நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், துணை முதல்வர் உதயநிதி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு, தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share