ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (நவம்பர் 19) காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தசூழலில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்துவருவதாகவும், அரசு நியமித்த தேர்வு குழு பரிந்துரையின்படி துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.
நவம்பர் 10-ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன் என்று மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ரவி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து நேற்று (நவம்பர் 18) சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டு 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி நேற்றே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
மசோதா விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்தசூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி சென்றார். ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு குறித்து டெல்லியில் சட்ட ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வருகின்றன. ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் அரசியல் அரங்கில் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அறவழியில் போராடிய விவசாயிகள் ரவுடிகளா? – எடப்பாடி காட்டம்!
நிர்மலா சீதாராமனிடம் முறையீடு: ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!