நிர்வாக திறமையின்மையால் கீழ்வெண்மணியில் ஓலை குடிசைகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

Governor ravi criticize government

Governor ravi criticize government

கீழ்வெண்மணி கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்படவில்லை என்று ஆளுநர் ரவி இன்று (ஜனவரி 29) குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஜனவரி 28) நாகப்பட்டினம் சென்றார்.

அப்போது கீழ்வேளூர் ஒன்றியம் கீழ்வெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்திற்கு ஆளுநர் ரவி செல்லும் போது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கீழ்வெண்மணி சென்ற ஆளுநர் ரவி 1968-ஆம் ஆண்டு நடந்த படுகொலையில், துப்பாக்கி குண்டு பட்டு காயமடைந்து உயிர்பிழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தியாகி பழனிவேலை சந்தித்து நலம் விசாரித்தார்.

Governor ravi criticize government

இதுகுறித்து ஆளுநர் ரவி நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,

“நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968’ படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன்.

மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Governor ravi criticize government

இந்தநிலையில், கீழ்வெண்மணி கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்படவில்லை என்று ஆளுநர் ரவி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்பவன் இன்று (ஜனவரி 29) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்: திருமா

காஞ்சிபுரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன்

Governor ravi criticize government

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel