தமிழக சட்டப்பேரவை தீர்மானங்களை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகப் பொருள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில், எண்ணித் துணிக என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது தமிழக சட்டப்பேரவையிலிருந்து அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்துப் பேசிய ஆளுநர் ரவி, “தமிழக சட்டமன்றத்தில் இருந்து ஒரு மசோதா வருகிறது என்றால் ஆளுநர் என்ற முறையில் அதைப் பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
தீர்மானங்கள் அரசியல் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஒருவேளை விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்றால் அதற்கு ஒப்புதல் வழங்க முடியாது.
அரசியலமைப்பின் படி ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை என்பது, ஆளுநர், சட்டசபை, சட்டமன்ற குழு ஆகியவை அடங்கியது. ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு அங்கம்.
ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படும் போது மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் ஒப்புதல் அளிக்கலாம். இரண்டாவது நிலுவையில் வைப்பது. மூன்றாவது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது. அதாவது பொது பட்டியலில் உள்ளது என்றால் அதன் மீது முடிவெடுப்பதற்காகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது.
இதில், பேரவை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக நிராகரிப்பதாகப் பொருள். நிலுவையில் வைப்பது என்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்று பொருள் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது என்று கூறினார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவை தீர்மானங்கள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட்டை மூடிவிட்டனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி
ராஜா இசையில்…மம்மி சொல்லும் வார்த்தை!