ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு அவரது அண்ணன் சத்யநாராயணா பதிலளித்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்த பயணத்தின் போது, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் என பலரையும் சந்தித்தார்.
தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர், நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ரஜினிகாந்த்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இப்படி அடுத்தடுத்து அரசியல் தலைவர்களைச் சந்திப்பதால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 3) மதுரையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், ஓபிஎஸ் – ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை” என்றார்.
ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி எதுவும் கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த சத்யநாரயணா, “அது இறைவன் கையில்.. ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை. வந்தால் வேண்டாம் என்பதற்கு இல்லை. வரட்டும்” என்றார்.
தொடர்ந்து ரஜினிக்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இந்த பேட்டியின் போது மதுரை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இராமலிங்கம்
திமுகவுக்கு ஆதரவு, அண்ணாமலை தனித்துப் போட்டியிடுவாரா?: சீமான் பேட்டி!