ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு

Published On:

| By Selvam

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஆளுநர் ஏன் அனுமதி அளிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு பதிலளித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு சட்டப்பூர்வ விசாரணையில் உள்ளது. கே.சி.வீரமணி மீதான விஜிலென்ஸ் இயக்குநகரம் வழக்கில் மேல் நடவடிக்கைக்காக புலனாய்வு அறிக்கையின் முறையான அங்கீகரிக்கப்பட்ட நகலை மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதனால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசிடமிருந்து எந்த குறிப்பும் கோரிக்கையும் இதுவரை வரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக்கொண்டதற்கான இரண்டு ஒப்புகை சீட்டுக்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக அரசின் பொதுத்துறையால் 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தினங்களில் அனுப்பப்பட்ட சீலிடப்பட்ட கவரை ஆளுநர் மாளிகையின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் பெற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்வம்

இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்… மார்க்கை எச்சரித்த மஸ்க்

டிஐஜி விஜயகுமார் மரணம்: கூடுதல் டிஜிபி அருண் கூறும் காரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel