பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (ஜனவரி 9 ) கூடியது. ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது.
ஆளுநர் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையுடன் திராவிட மாடல் என்ற வார்த்தையை படிக்காமல் புறக்கணித்ததால் அவையிலேயே சர்ச்சை வெடித்தது.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா என தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்களின் பெயர்களையும் அவர் உச்சரிக்கவில்லை.
சமூக நீதி, மதநல்லிணக்கம் போன்ற வார்த்தைகளையும் வாசிக்காத ஆளுநர், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்ற வாசகத்தையும் படிக்கவில்லை .
ஆளுநர் வாசிக்க தவிர்த்த ஒவ்வொரு வாசகத்திலும் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும், திராவிட மாடல் பாதையில் தமிழ்நாடு அரசு நடைபோடுகிறது என்ற வாசகத்தையும் படிக்காமல் தவிர்த்தார் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு என்ற இடத்தில் எல்லாம் இந்த அரசு என்று படித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த உரைக்கு, பேரவைக் கூட்டத்திலேயே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இந்த நிலையில், ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமர்சித்துப் பேசினார். இதனால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும் முன்னரே ஆளுநர் வெளியேறினார்.
அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக கூறி ஆளுநரின் இந்த செயலை கண்டித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் நடந்து கொண்டார்.
இதே போல் மத்திய அரசு தன்னுடைய உரையை குடியரசுத்தலைவரிடம் வைக்கும் பொழுது அதை குடியரசுத்தலைவர் அப்படியே வாசிக்கிறர். ஆனால் ஆளுநர் தானாகவே சேர்த்து சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் தேசிய கீதம் இசைக்கும் முன்பு அவர் வெளியே சென்றது நாட்டுக்கே இழுக்கு என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாற்றி வாசித்த ஆளுநர்: கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் !
ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் இல்லை… திடீரென தள்ளிவைக்கப்பட்ட விஜய் படம்!
வீரம் மிக்க தமிழக ஆளுநர் RN ரவி அவர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது.