துறைமாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர மறுப்பு!

அரசியல்

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வசமிருந்த துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றித் தரப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அதில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று கூறியிருந்தார்.

இந்த கடிதத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. அது தவறானது என கூறி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

“முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு துறையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனிப்பார்.

அதுபோன்று செந்தில்பாலாஜி வகித்து வந்த “மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை” துறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார். இதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

எனினும், கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு தற்போது நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளதால் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

தமிழ்நாட்டிற்கு 1,000 புதிய பேருந்து வாங்க நிதி ஒதுக்கீடு!

விஜய் பிறந்தநாள்: மாஸ் சர்ப்ரைஸ் கொடுத்த ’லியோ’ படக்குழு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “துறைமாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர மறுப்பு!

  1. எது தவறானது 😋 எது எப்படி சரியானது!?
    😀…. யோவ் காமராசு..அவர் பேர் வச்சிட்டு இப்படியா?..🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃👯‍♂️👯‍♂️👯‍♂️👯‍♂️👯‍♂️👯‍♂️👯‍♂️👯‍♂️👯‍♂️👯🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *