ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்த அறிவிப்பார் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் கேலரியில் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசித்த அமைச்சர் உதயநிதி பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.
இதன்பின் திடீரென அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. நிறைய காளைகள் வீரர்கள் விளையாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஒரு அவசர வேலையின் காரணமாக கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு வீரர்கள் அரசு வேலை வேண்டும் என தொடர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வரிடம் பேசி பரிசீலனை செய்யப்படும்.
பாலமேட்டில் நேற்று உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார்.
பிரியா