ஆளுநருடன் அமித் ஷா சந்திப்பு: ’பர்போஸ்’ சஸ்பென்ஸ்!

Published On:

| By Monisha

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூலை 8) அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கடந்த ஜூன் 29 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் இந்த அறிவிப்பை வெளியிட்ட 5 மணி நேரத்திலேயே ஆணையை நிறுத்தி வைத்தார் ஆளுநர்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜனரலின் கருத்தை கேட்க உள்ளதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்க கோரிய விவகாரத்தில் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடித போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

வரும் ஜூலை 13 ஆம் தேதி டெல்லி சென்றுள்ள ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார் ஆளுநர்.

இந்த சந்திப்பு குறித்து புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராஜ்பவன், “ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் காரணத்தோடு கூடிய சந்திப்பு” என்று குறிப்பிட்டுள்ளது.

மோனிஷா

1,000 ரூபாய்… 13 கேள்விகள்: விழிபிதுங்க வைக்கும் விண்ணப்பம்!

டிஐஜி விஜயகுமாரின் கடைசிப் பொழுதுகளும், இறுதி நிமிடங்களும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel