தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஜூலை 7) ஏழு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஜூன் 29 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவை பிறப்பித்த 5 மணி நேரத்திலேயே ஆணையை நிறுத்தி வைத்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நாளை டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. டெல்லிக்கு 7 நாள் பயணமாக செல்லும் ஆளுநர் ஜூலை 13 ஆம் தேதி தான் சென்னை திரும்ப உள்ளார்.
மோனிஷா
எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்
தாம்பரம் காவல்துறையில் தடாலடி மாற்றம்: தயார் நிலையில் டிஜிபி