காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 13) காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு மாதமும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை அலுவல் ரீதியாகச் சந்தித்து வருகிறார்.
இன்று காலை 6.05 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
அந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து பேசியதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!
வீடு திரும்பும் போது சோகம் – ஓடும் பேருந்தில் தீ: 17 பேர் உயிரிழப்பு!