25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் மாளிகை தாமதம் செய்கிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் 25 ஆண்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக அரசு 14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த 700 சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆணையிட்டு உள்ளது. ஆளுநர் அந்த அரசாணையை ஏற்று சிலரை விடுதலை செய்து உள்ளார்.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகள் 37 பேருக்கு விடுதலை கிட்டவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளிடம் இருந்து வருகிறது.
37 பேரின் குடும்பங்களை பாதுகாக்கவும், தமிழக அரசு கருணை கொண்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு திமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக உள்ளது என்று பொதுவான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
இஸ்லாமியார்களை விடுதலை செய்யக் கூடாது என தமிழ்நாட்டில் சில அமைப்புகள் உள்ளது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அப்படி எதிர்க்கும் சூழல் உள்ளது. எதிர்ப்பு இல்லாத நிலையிலும் விடுதலை செய்ய வேண்டும்.
ஆயுள் தண்டனை என்பது எவ்வளவு காலம் என்பதில் ஒரு வரையறை இல்லை. சிறைவாசிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் இதுவரை அரசின் சார்பில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அரசு 700 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி வைத்தும் ஆளுநர் ஒவ்வொரு ஆட்களையும் ஆய்வு செய்த பிறகு தான் விடுதலை செய்தார். இன்னும் கூட சிலர் வெளியே வரவில்லை. இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் மாளிகை தாமதம் செய்கிறது” என்று தெரிவித்தார்.
“கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்” – கனகராஜின் அண்ணன் தனபால்
கேமராமேன் பலி: முதல்வர் நிவாரணம்!