நகைக்கடைகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பா?

அரசியல்

இந்தியாவில் உள்ள பிரபலமான நகைக்கடைகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி மே 19-ஆம் தேதி அறிவித்தது. இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2018-19ஆம் காலாண்டில் இரண்டாயிரம் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பொருளாதார நாணய தேவையை பூர்த்தி செய்ய ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தற்போது அதன் தேவை குறைந்துள்ளதால் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நாள் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தவுடன் பலரும் ரூ.2000 நோட்டுக்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியா முழுவதும் பிரபலமான சில நகைகடைகளில் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சிலர் கூறும்போது, “ரூ.2000 நோட்டுகளை கொண்டு தங்கம் வாங்கினால் சில நகைக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகைக்கு நகை விற்பனை செய்கிறார்கள். இதனால் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தி நகைகள் வாங்க சிரமமாக உள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.

வங்கிகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து பட்டய கணக்காளர் மெகுல் ஷா கூறும்போது, “ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெற்றதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். கையிருப்பில் அதிகளவில் பணம் வைக்க விரும்பாத மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இந்தசூழலில் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், மக்கள் தங்கள் கையிருப்பில் உள்ள தொகையை தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு நபரிடம் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ரூ.2000 நோட்டுக்கள் இருந்தால் இருந்தால் அவர் 25 முறை வங்கிக்கு செல்ல வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தளபதி 68: அப்டேட் வெளியிட்ட படக்குழு!

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: மோடி திறக்க ராகுல் எதிர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *