கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!

Published On:

| By Aara

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பல அதிரடி பேச்சுகளை அரங்கேற்றி வரும் நிலையில், இதன் உச்சகட்டமாக நேற்று (மே 21)  இந்தி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்,
“ என் அம்மா உயிருடன் இருந்தபோது, நான் உயிரியல் ரீதியாக பிறந்தேன் என்று நம்பினேன். அவர் மறைந்த பிறகு, என்னுடைய எல்லா அனுபவங்களையும் யோசித்துப் பார்த்தபோது, கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த ஆற்றல் என் உயிரியல் உடலில் இருந்திருக்க முடியாது, அது கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது. கடவுள் என்னை ஒரு நோக்கத்திற்காக திறன்கள், உத்வேகம் மற்றும் நல்ல நோக்கங்களைக் கொடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன்… நான் ஒரு கருவியைத் தவிர வேறில்லை. அதனால்தான், நான் எதையும் செய்யும்போதெல்லாம், கடவுள் என்னை வழிநடத்துகிறார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்து குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி திமுக வேட்பாளருமான ஆ.ராசா எம்பி. இதுகுறித்து தனது  பதிவில்,

”நான் கடவுளின் தூதன் – மோடி. கடவுள் இல்லவே இல்லை என்று பெரியார் ஏன் சொன்னார் என்று இப்போது தான் பலருக்கும் புரிகிறது. வாழ்க மோடி” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியின் இந்த கருத்தைக் குறிப்பிட்டு… ‘ஐயோ…’ என கமென்ட் அடித்துள்ளார்.

வேந்தன்

பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள மர்மம் என்ன? யார் அந்த தமிழர் வி.கே.பாண்டியன்?

”ஆர்சிபி ஃபைனல் வருவதை கொல்கத்தா விரும்பாது” – வருண் ஆரோன்