தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார். Which alliance have TMC
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் ’இந்தியா’ என்ற பெயரில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் தமிழ்நாட்டில் கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த அதிமுக, தங்களது கட்சி தலைமையில் தனியாக கூட்டணி அமைத்து மக்களவைதேர்தலை எதிர்கொள்வோம் என்று அறிவித்துவிட்டது.
இதனையடுத்து இருகட்சிகள் இடையே மீண்டும் சமரச உறவை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் ஈடுபட்டு வந்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையையும் சந்தித்து பேசிய அவர், டெல்லி வரை சென்றும் பேசி வந்தார்.
ஆனால் அவரது முயற்சிகள் இதுவரை பலனளிக்காத நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்தக் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி. கே. வாசன் பேசுகையில், “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கூட்டம் நடத்தி வருகிறேன்.
முற்றிலும் முரண்பாடான கூட்டணியாக ’இந்தியா’ உள்ளது. எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்பது குறித்து தொண்டர்கள் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. எனினும் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்டவையின் நட்புக்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்” என்று ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார். Which alliance have TMC
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
AK63: அஜித்தை இயக்கும் ஆதிக்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: என்ன ஸ்பெஷல்?