பாஜகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை : அதிமுகவில் இணைந்த தமாகா நிர்வாகி!

அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக தமாகா கட்சி இன்று (மார்ச் 2) பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அக்கட்சியின் நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

பாஜக சார்பில் பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இதில் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜி.கே.வாசன் பேசுகையில், “பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் பாஜக உடனான முதல் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது.

இன்று நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் களம், தேர்தல் வியூகம் அமைப்பது குறித்து பேசினோம்.

மக்களவைத் தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட வரும் மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.

விருப்ப மனுக்கள் பெறப்பட்டு தேர்தல் குழு அமைத்த பின்னர் பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று வாசன் தெரிவித்தார்.

இதற்கிடையே பாஜக கூட்டணியில் தமாகா இணைந்தது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அக்கட்சியில் தலைமை நிலைய செயலாளராக இருந்த டி.என்.அசோகன், தமாகாவில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார்.

இந்த நிலையில், தமாகா  விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயராஜ் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதே வேளையில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்துள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அரசியலுக்கு குட் பை : கம்பீர் அதிரடி முடிவு!

அறிவாலயத்துக்கு செல்லாமல் உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டிய திருமா

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *