பொங்கலுக்கு ரூ.5000 வழங்குக: எடப்பாடி பழனிசாமி

அரசியல்


பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

அதிமுக அரசு 2020ல் பொங்கல் பரிசுத் தொகையாக 1000 ரூபாய் வழங்கியது. 2021ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக அதிகரித்து வழங்கியது.

2022ல் திமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரொக்கம் வழங்கவில்லை. மஞ்சள், ரவை,புளி, வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று (டிசம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் ஆட்சியிலிருந்தபோது எங்களிடம் கேட்டபடி தை பொங்கலுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும். அதுபோன்று 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு செங்கரும்பை வழங்க வேண்டும்“ என்று வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக ஓபிஎஸ் 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரியா

தமிழக அரசு உலக சாதனை: 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு!

லத்தி : விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “பொங்கலுக்கு ரூ.5000 வழங்குக: எடப்பாடி பழனிசாமி

  1. எடப்பாடி எவ்வளவு கொடுத்தாருன்னு அவருக்கே தெரியாது, 3000,5000 தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம், டபுள் போனசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *