காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் குலாம் நபி ஆசாத்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத்தலைவர் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
அத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராகவும் நீண்ட நாட்கள் இருந்தவர் குலாம் நபி ஆசாத்.
கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொண்டுள்ளார்.
கலை.ரா
ஆகஸ்ட் 28-ல் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு!