தமிழகத்தின் 10 முக்கிய விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் முக்கிய அம்சமாக, பண்ருட்டி பலா, சாத்தூர் வெள்ளரி, அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, வேப்பங்குளம் தென்னை, அரிமாங்குடி வெல்லம், வீரமாங்குடி அச்சு வெல்லம்,
விளாத்திகுளம் மிளகாய், கோட்டை மலை கத்திரி, மதுரை செங்கரும்பு ஆகிய பத்து விளை பொருட்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
பிரியா
வேளாண் பட்ஜெட்: அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!
தக்காளிக்கு ரூ.19 கோடி, வெங்காயத்துக்கு ரூ.29 கோடி!