ஓ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று ( பிப்ரவரி 3 ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லியில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும். பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நல்ல நோக்கத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டுவார்” என்றார்.
மேலும், “இருதரப்பும் கையெழுத்து போடுவது என்பது சாத்தியம் இல்லாதது. இந்த வழக்கு என்பது இந்த தேர்தலுக்கு மட்டும் தான்.
குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்பதால் கடிதம் மூலமாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களினுடைய கருத்துகளை பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தேர்தல் ஆணையம் பதில்: அதிமுக கண்டனம்!
சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?