என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? நொந்து போன காயத்ரி ரகுராம்

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், பாஜகவிற்கு களங்கம் விளைவித்ததாக கூறி, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், நான் ஒரு எளிதான இலக்காக இருக்கிறேன், ஆனால், நான் ஒரு பெண்ணாக வலுவாக நிற்பேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” பாஜகவில் இருந்து என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரைப் பின்பற்றுவது? இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் போது.. எப்படி? இந்த உத்திகளை நான் 8 ஆண்டுகளாக எதிர்கொண்டு நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பாஜக காரியகர்த்தா மட்டுமே” என்று கூறியுள்ளார்.

மேலும், “என்மீது சுமத்தப்படும் எல்லாப் பழிகளையும் நான் அறிவேன். பலர் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளாக இருப்பதால், அனைத்து திணிக்கப்பட்ட IB அறிக்கைகளும் எனக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளும் தர்மமும் என் பக்கத்தில் இருப்பது எனக்குத் தெரியும்.

நான் இடைநீக்கத்தில் இருக்கிறேன், நான் ஒரு எளிதான இலக்காக இருக்கிறேன், ஆனால், நான் ஒரு பெண்ணாக வலுவாக நிற்பேன் ” என்றும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவுகள் சமூக வலைதளத்தில் தற்போது விவாதத்திற்குள்ளாகி வருகிறது.

பாஜகவிற்கு எதிராக தான் செயல்படுவதாக யார் கூறினாலும் அவர்களை எதிர்ப்பதாகக் கூறியிருந்த காயத்ரி, காசி தமிழ்சங்கமத்தில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய வருத்தம் அளித்தது என்றும், அதற்கான ஆலோசனைக் கூட்டங்களிலும் தன்னைப் புறக்கணித்ததாக வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நள்ளிரவில் எம்.எல்.ஏ வீடு முற்றுகை: திருப்பத்தூர் மக்கள் விடிய விடிய போராட்டம்!

அர்ஜென்டினா வெற்றி: உருகிய மெஸ்ஸி மனைவி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts