கவுதம சிகாமணி எம்.பி-யிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!

அரசியல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.பி கவுதம சிகாமணிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை சென்னை கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) வழங்கியது.

கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளுக்கு மீறி அதிக அளவில் செம்மண் எடுத்ததால் தமிழக அரசுக்கு ரூ.29 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் வீடுகளில் ஜூலை மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.7 கோடி நிரந்தர வைப்புத்தொகை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு பணத்தை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கவுதம சிகாமணி, ராஜ மகேந்திரன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை 90 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் வழக்கானது 12-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கெளதம சிகாமணி, கே.எஸ்.ராஜமாணிக்கம் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மன்சூர் அலிகான் முன் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

“த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”: மன்சூர் அலிகான்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *