அரசியலுக்கு குட் பை : கம்பீர் அதிரடி முடிவு!

அரசியல் விளையாட்டு

அரசியலில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் பாஜக எம்.பியும், கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதனையடுத்து  பாஜகவில் இணைந்த அவர் 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே ஐபிஎல் தொடரிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முதல் இரண்டு சீசன்களில் ஆலோசகராக கம்பீர் இருந்தார்.

தற்போது அவர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆலோசகராக  பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் கவுதம் கம்பீர் தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், என்னை அரசியல் பொறுப்புகளில் இருந்து நீக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மக்களுக்கு சேவை செய்ய இதுபோன்ற வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எனது நன்றி” என்று கம்பீர் ட்வீட் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிகரிக்கும் வெயில்… ஐஸ்கிரீம் விலையை உயர்த்திய ஆவின்!

ஜவாஹிருல்லா, வேல்முருகனுக்கு திமுக அழைப்பு: வைகோவுக்கு செக்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *