18-வது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராகவும் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், மக்களவை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக கெளரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக கெளரவ் கோகோய், தலைமை கொறடாவாக கொடிக்குன்னில் சுரேஷ், துணை கொறடாவாக மாணிக்கம் தாகூர் மற்றும் ஜவாய்த் ஆகியோரை நியமிக்கக்கோரி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் படி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் தொகுதியில் இருந்து கெளரவ் கோகோய் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடிக்குன்னில் சுரேஷ் கேரள மாநிலம் மாவ்லிக்காரா தொகுதியில் இருந்தும், மாணிக்கம் தாகூர் விருதுநகர், ஜாவத் பிகார் மாநிலம் கிஷான் கன்ஜ் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி வெற்றி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா
என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம்… கடைசியாக தந்த திகில் வாக்குமூலம்!