ரூ.500க்கு சிலிண்டர்: முதல்வர் அறிவிப்பு!

அரசியல்

2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 500 ரூபாய்க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போதே ஆளும் காங்கிரஸ் – எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “அடுத்த மாதம் பட்ஜெட்டிற்கு நான் தயாராகி வருகிறேன். தற்போது ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு பிரதமர் மோடி சிலிண்டர் வழங்கி வருகிறார்.

ஆனால், இவை அனைத்தும் காலியாகவே உள்ளன. ஏனென்றால் சிலிண்டர் விலை ரூ.400 மற்றும் 1,040 ஆக உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை ரூ.500க்கும் நாங்கள் வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு அங்கு நடைபெற இருக்கும் தேர்தலை மையப்படுத்தியே, அசோக் கெலாட் இப்படி பேசியிருப்பதாக, பாஜகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

இந்தியாவை விமர்சித்த இன்போசிஸ் நிறுவனர்!

அண்ணாமலை வாட்ச்: உண்மையிலேயே ரஃபேல் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *