டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக்கான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகில் தலைசிறந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 குழுவின் 18 ஆவது ஜி20 மாநாடு 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பொறுப்பு முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் தயார் செய்ய தொடங்கியுள்ளது.
குறிப்பாக ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை மாநாடு, நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை,திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் நடைபெறும் மாநாட்டின் துணை மாநாட்டில் ஜி20 மாநாட்டின் போது ஆலோசிக்கப்படும் சாராம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இதற்காக மாநில அரசின் ஒத்துழைப்பை கோரும் வகையில் இன்று(டிசம்பர் 5)பிரதமர் மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிஜூ ஜனதா தளக் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மகராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோடர் கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கலை.ரா
மீண்டும் தலைவரானார் பரூக் அப்துல்லா
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தார்!