‘ஆவின் தயிர் பாக்கெட்களில் தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும்’ என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசு கூட்டுறவுச் சங்கங்களான தமிழகத்தின் ஆவின், கர்நாடகாவின் நந்தினி புதுவையின் பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தஹி என இந்தியில் எழுத மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
இதற்குத் தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தயிர் பாக்கெட்டுகளில் கூட இந்தி திணிப்பா என ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தஹி என்று அச்சிட வேண்டாம் என்று மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுபோன்று தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததால் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் புதிய அறிவிப்பில், ஆங்கிலத்தில் curd எனவும் அடைப்புக்குறிக்குள் உள்ளூர் மொழிகளில் குறிப்பிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக curd (தயிர்) என பாக்கெட்டுகளில் அச்சிடலாம் என தெரிவித்துள்ளது.
பிரியா
விராட் – ஷாருக் ரசிகர்கள் இணையத்தில் மோதல்!
15 நாட்களாக சிகிச்சை: ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்?
Comments are closed.