தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் ஆளுமை, பணி வலிமையால், நீங்கள் அசாதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளீர்கள். நாட்டின் செழிப்பையும், மதிப்பையும் உயர்த்தி உள்ளீர்கள். தேச உணர்வோடு உங்களின் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
நமது அன்புக்குரிய பிரதமர் மோடியின் பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து, நீண்ட ஆரோக்கியத்துடன் பொது சேவையுடன் வாழ வாழ்த்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பிரதமர் நரேந்திர மோடி இன்று 74ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் தொலைநோக்குப் பார்வையுடனும், நீண்ட காலக் கண்ணோட்டத்துடனும், இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுடன் நமது தேசத்திற்கு ஞானத்துடனும் இரக்கத்துடனும் தொடர்ந்து சேவை செய்து, பெரிய பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், எல்லாம் வல்ல இறைவனை உங்களுக்குப் பொழியுமாறு பிரார்த்திக்கிறேன்.
இந்த சிறப்பு நாள் உங்கள் புகழ்பெற்ற பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கட்டும்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக சார்பில் சார்பில், எங்கள் அன்புக்குரிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்
பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களது நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெரியார் பிறந்தநாள் : ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!
23 வயது இளைஞர்… கால்பந்து விளையாடிய போது நடந்த பரிதாபம்… நடந்தது என்ன?