விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (செப்டம்பர் 29) மாலை பொறுப்பேற்க உள்ளார்.
இதனையடுத்து தேசிய தலைவர்கள் முதல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், பிரபலங்கள் என பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி கட்சி தலைவர்)
தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த புதிய பொறுப்பில் அவர் வெற்றிபெற வாழ்த்துகள்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக எம்.பி)
வருங்கால தமிழ்நாட்டை வழிநடத்தும் இளஞ்சூரியனாய், புதியதொரு தடம் பதிக்கும் இளைஞர்களின் நம்பிக்கை நாயகன்- தலைவர் தளபதியின் கரத்தை வலுப்படுத்தி, வரலாற்றில் நிலைத்த புகழை கழகத்திற்கு ஈட்டித் தரும் புதிய சகாப்தத்தைத் துவங்கும் துணை முதலமைச்சர்- அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
செஞ்சி மஸ்தான் (முன்னாள் அமைச்சர்)
கலைஞரின் பேரப்பிள்ளை , தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவித்த கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்பு கலந்த நன்றிகள்.
செந்தில் பாலாஜி
எங்கள் இதயம், தமிழ்நாட்டின் உதயம்.! இன்று, திராவிட மாடல் நாயகருக்கு துணை.. இனி, திராவிட மண்ணுக்கும் நீயே துணை.! இளையசூரியனே.. தமிழ்நாடு துணை முதலமைச்சரே! வாழ்த்துகிறோம்.. வணங்குகிறோம்.. உங்கள் பாதையில் நடக்கிறோம்..
கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்)
வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் துணை முதலமைச்சராக உயர்ந்துள்ளீர்கள். இன்று, நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்களுக்கும் உறுதிமொழி எடுக்கிறீர்கள். இரண்டுக்கும் நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
தனுஷ் (நடிகர்)
தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெங்கட் பிரபு (இயக்குநர்)
உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் சார்! துணை முதல்வராகவும், தலைவராகவும் இருந்து, நம் மக்களுக்கு அற்புதங்களைச் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை!🙏🏽❤️🔥
இதுதவிர கே.என்.நேரு, சேகர் பாபு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேவேளையில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி ஆகியோரை நேரில் சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி அமைச்சரானால் சாட்சிகளை கலைக்க மாட்டாரா?- ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!
”விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” : கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி பேட்டி!