பிரதமர் பார்னியருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…. பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!

Published On:

| By Selvam

French Government Collapsed no confidence

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், ஆட்சி கவிழ்ந்துள்ளது.

ஐரோப்பாவில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று பிரான்ஸ். இங்கு அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் வருகிறது.

பிரான்ஸில் அதிபரை தேர்வு செய்வதற்கு ஒரு தேர்தலும், பிரதமரை தேர்வு செய்வதற்கு ஒரு தேர்தலும் நடைபெறும்.

கடந்த மே மாதத்தில் பிரான்ஸ் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 577 இடங்களில் பெரும்பான்மைக்கு 289 இடங்கள் தேவையாகும்.

இந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி 188 இடங்களிலும், அதிபர் மேக்ரானின் மத்தியவாதக் கூட்டணி 161 இடங்களிலும், அதிதீவிர வலதுசாரி கூட்டணி 142 இடங்களிலும் வெற்றி பெற்றது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசு கட்சியைச் சேர்ந்த மைக்கேல் பார்னியரை கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

இந்தநிலையில், பிரதமர் மைக்கேல் பார்னியர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததாக தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனையடுத்து பிரதமர் மைக்கேல் பார்னியர் அரசுக்கு எதிராக அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் 331 பேர் மைக்கேல் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பார்னியர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1962-ஆம் ஆண்டு ஜார்ஜஸ் பாம்பிடோவின் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு எந்த பிரான்ஸ் அரசாங்கமும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடையவில்லை.

60 ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசு தோல்வியை சந்தித்திருப்பதால், அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவில்பட்டி எல்லையைக் கூட தாண்டுனதில்லை… ரூ.2,000 ஃபைனா? – குமுறும் பெண்!

72 வயதில் சிறை… 104 வயதில் விடுதலை… யார் இந்த ரசிகத் மொண்டல்?

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு விரைவில்?

ஆப்பிள் இறக்குமதிக்குத் தடை நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share