Sankaraiah passed away

’தகைசால் தமிழர்’ சங்கரய்யா காலமானார்!

அரசியல்

சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவால் இன்று (நவம்பர் 15) காலமானார்.

சுதந்திர போராட்ட வீரரும் தகைசால் தமிழர் விருது பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சங்கரய்யா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

“சிறந்த இயக்குனர்” விருது வென்ற பார்த்திபன்

ICCWorldcup: இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Comments are closed.