இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறதா? அமைச்சர் பிடிஆருக்கு சீமான் கேள்வி!

அரசியல்

“இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறதா” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியாவில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

ஆகஸ்ட் 10ம் தேதி, ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடியும் இலவசங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு எதிரானவை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, பதிலளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “தேர்தலின் மூலம் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எனக்கு கொடுத்த பணியினை சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒன்றிய அரசைவிட சிறப்பாக செயல்படுகிறோம். அடுத்த 3 ஆண்டுகளும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வோம்” என இலவசத்துக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர் பேசியிருந்தது வட இந்திய ஊடகங்களில் வைரலாகியது.

இந்த நிலையில், 2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 18) சீமான் ஆஜரானார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் பி.டி.ஆர் பேசிய இலவசம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சீமான், “இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் சொல்ல முடியுமா? இலவசங்களால் இழக்கப்படும் பணம், எங்கிருந்து எடுக்கப்படுகிறது? லட்சக்கணக்கில் கடன் இருக்கும் என்று சொல்லும் நீங்கள்,

இந்த இனிப்பான வெற்று பசப்பு அறிவிப்புகளை ஏன் அறிவிக்கிறீர்கள்? மிக அவசிய தேவைகளான கிரைண்டர், மிக்சி, மடிக்கணினி, மின்விசிறி, தொலைக்காட்சி இவையெல்லாம் சொந்த வருமானத்தில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய ஒன்று.

இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம்கூட வளராது” என்றார்.

ஜெ.பிரகாஷ்

விவசாயத்தை அழித்து விமான நிலையமா? சீமான் கண்டனம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறதா? அமைச்சர் பிடிஆருக்கு சீமான் கேள்வி!

  1. இலவசம் இரண்டு திராவிட கட்சிகள் கொடுக்குது ஆனால் தமிழகம் எல்லா மாநிலத்தை விட முன்னேரி இருக்குதா இல்லையா.. இலவசம் கொச்சை படுத்த வேண்டாம், இலவச டிவி பெற்ற மனிதன் சுய மரியாதைவோடு வீட்டில் உட்கார்ந்து பார்க்க முடியுது. மேல் வர்க்க காரனுக்கு இலவசம் பற்றி புரியாது.
    சரி சீமானுக்கு உழைக்காமல் எப்புடி சொத்து சேர்த்தார்? மோடி ஏன் அம்மா ஸ்கூட்டர் இலவச திட்டதுக்கு வந்தார்?

    இலவசத்தால் மக்கள் பயணடைந்து இருக்கிறார்கள், இலவச திட்டதால் கொள்ளை போவது தடுக்க முடியாதது ஓன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *