இலவசங்கள் வழக்கு – அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உச்ச நீதிமன்றம் யோசனை!

அரசியல்

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 23) விசாரணைக்கு வந்தபோது இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான வித்தியாசத்தை நாங்களும் அறிவோம் என்று நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தபோது, இலவசங்கள் தொடர்பாக நீதிமன்றமே ஒரு குழு அமைக்கலாமே என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் நாங்கள் ஆணையம் அல்லது குழு அமைப்பதை ஏற்கனவே மாநிலங்கள் எதிர்க்கின்றன,

எனவே மத்திய அரசே இதற்கு ஒரு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டியவை என்று கூறிய தலைமை நீதிபதி, இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாளை ஆட்சிக்கு வரலாம், அப்படி வருபவர்கள் இதை நிர்வகிக்கவேண்டும் என்றார்.

தேர்தலுக்கு பின் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவதை பற்றியும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்பு ஒரு ஆழமான விவாதம் தேவை என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

இலவசங்கள் தொடர்பான வழக்கு தற்போது 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

கலை.ரா

திமுக தான் சாதுர்யமான கட்சியா? தலைமை நீதிபதி காட்டம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.