இலவச வேட்டி, சேலை: இந்த ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா?

அரசியல்

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் நியாய விலைக்கடைகள் மூலமாக இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி வரும் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று(நவம்பர் 19)ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி,  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலைத் திட்டத்துக்காக ரூ. 243 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 80 லட்சம் ஆண்கள் மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் பெண்களுக்கு வேட்டி, சேலை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டுகளைப் போன்று இல்லாமல் இந்த ஆண்டு புதிய வகையில், தரமான ஆடைகளை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.

அதற்காக மாதிரி ஆடைகள் முதலமைச்சரிடம் காண்பிக்கப்பட்டு அதற்கு அவர் ஒப்புதலும் தந்திருக்கிறார். அந்தவகையில் இந்த ஆண்டு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை புதுமாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலை.ரா

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

பிடிஆர் vs ஐ.பெரியசாமி: அமைச்சர்களிடையே கருத்து மோதல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *