மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
“கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை கண்டுள்ளது. 2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்கும் போது இந்திய பொருளாதாரம் பின் தங்கியிருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது.
இலவச ரேஷன் மூலம் 80 கோடி பேரின் பசி பட்டினியை இந்த அரசு நீக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளது.
அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது.
சமூக நீதி என்பது முன்னதாக அரசியல் முழக்கமாக மட்டுமே இருந்தது. பாஜக அரசை பொறுத்தவரை இது இந்த அரசின் அத்தியவாசிய நோக்கம்.
ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகிய நான்கு தரப்பினருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
ஊழல் ஒழிப்பு மற்றும் வாரிசு அரசியல் ஒழிப்பு என்பதை வெளிப்படைத் தன்மையுடன் செய்து வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா