அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி இன்று (மார்ச் 17) அறிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அரசு பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, பட்டியலின பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற புதுச்சேரி அரசின் அறிவிப்பிற்கு பட்டியலின மக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனமும், அதிருப்தியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “இளம் விதவை உதவித்தொகை ரூ.2,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
காரைக்காலில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும்.
தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி அரசின் அனைத்து அரசு ரேசன் அட்டை தாரர்களுக்கும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ” இவ்வாறு அவர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
போலி பிரதமர் அலுவலக அதிகாரிக்கு ’இசட் பிளஸ்’ பாதுகாப்பு!
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!