நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நான்கு மாநில தேர்தல் முடிவுகள் இதோ….
தெலங்கானா
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. பிஆர்எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 7, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சத்தீஸ்கர்
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 54 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 35, கோண்ட்வானா கந்தந்த்ரா கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசம்
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் 65, பாரத் ஆதிவாசி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 69, பாரத் ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2, ராஷ்ட்ரிய லோக் தளம் 1, ராஷ்டிரிய லோக்தன்ட்ரிக் 1, சுயேட்சைகள் 8 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்ஷன்!