இலவச மின் இணைப்பு: நவ. 11 கரூரில் தொடக்கம் – செந்தில் பாலாஜி

அரசியல்

“கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவம்பர் 7) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

formers free electricity scheme

பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக விவசாயிகள் பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.

அதில், முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 11ஆம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தடாகம் பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
முன்பதிவு செய்ததன் அடிப்படையில், இந்த 50,000 பேருக்குமே இலவச மின் இணைப்புகளுக்கு உண்டான ஆணைகள் வழங்கப்படுகிறது.

பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை, சொன்னதைப்போலவே நிறைவேற்றி வருகிறோம்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

10% இடஒதுக்கீடு: உமா பாரதி வரவேற்பு!

இமாச்சல் தேர்தல்: நாளை கார்கே பிரசாரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *