bharat ratna award 2024

நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் : ஒரே நாளில் 3 பாரத ரத்னா!

அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், சரண் சிங், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு  இன்று (பிப்ரவரி 9)  மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. bharat ratna award 2024

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று  தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பற்றி பிரதமர் மோடி தனது பதிவில் , “ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் இருந்தார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவுக்கூரப்படும்.

அவரது தொலைநோக்கு பார்வை இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது இந்திய பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.

மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் நரசிம்ம ராவ் முக்கிய பங்காற்றினார்” என்று நினைவுகூர்ந்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றி பிரதமர் மோடி, “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சவாலான காலங்களில் இந்திய விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் மற்றும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றிய சவுத்ரி சரண் சிங் பற்றி பிரதமர் மோடி, “தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர் சரண் சிங். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பிகாரில் இரண்டு முறை முதல்வராக இருந்த கற்பூரி தாகூர் ஆகியோருக்கு  பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த இரு வாரங்களில் 5 பேருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்: அச்சாணியை கவனிக்குமா அரசு?

‘லவ்வர்’ படம் எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

bharat ratna award 2024

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *