உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி குற்றவாளி என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.பதவியை இழந்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்துள்ளது.
இந்தச்சூழலில் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ.பதவி வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் பேரவை செயலாளர் சீனிவாசன் ஆலோசனை நடத்தி வருகிறார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பொன்முடி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாக பொன்முடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Chennai Metro நிலையங்களில் வரப்போகும் சூப்பர் வசதி!
“தமிழ்நாட்டுக்கு மோடி வெறும் கையால் முழம் போடுகிறார்” : ஸ்டாலின்