நிலமோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது கரூர் வாங்கல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் ரெய்டு நடத்தினர். தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் வைத்து சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரை கைது செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மணல் குவாரி தொழிலதிபர்கள் மீதான ED வழக்கு ரத்து!

இளவேனில் டூ மனு பாக்கர்… சூட்டிங்கில் பதக்கங்களை சுட காத்திருக்கும் இந்தியா

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts